நியூயார்க்

ன்று அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் தொடங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), நோவத் ஜோகோவிச் (செர்பியா), கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஆகிய மூவர் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.629 கோடியாகும். கடந்த ஆண்டை விட இது 15% அதிகமாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு ரூ.30 கோடி பரிசாக கிடைக்கும். மேலும் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியும் பெறுவார்கள்.

இதைப் போல் 2-வது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்படும்.

போட்டியில் ஒற்றையர் முதல் சுற்றில் கால் பதித்தாலே ரூ.83 லட்சம் தொகையுடன் தான் வெளியேறுவார்கள். இதைப் போல் இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.6¼ கோடி பரிசாக கிடைக்கும்.