
வரும் சட்டமன்றத் தேர்தலில் 100 சத வாக்குப்பதிவு ஆகிவிட வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருக்கிறது போலும். வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பாடல்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலகமான கோட்டையில், சட்டமன்றத் தேர்தல் பிரிவில் இந்த ஆடியோ வெளியீடு நடந்தது. தமிழக முதன்மைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி, இந்த ஆடியோவை வெளியிட்டார்.
மொத்தம் 6 இசைப் பாடல்கள். முதல் பாடல் ‘தேர்தலன்று வாக்களிக்க எல்லோரும் வாங்க’ என்பதாகும். இதை . இயக்குனர் திரு.ஜிப்ஸி ராஜ்குமார் மற்றும் திருமதி.கீர்த்திகா பாபு ஆகியோர் பாடினர்.
‘மறக்காதே வாழ்வில் மறக்காதே’ பாடலை நிகில் மேத்யூ மற்றும் திருமதி.கீர்த்திகா பாபு ஆகியோரும் ‘சுதந்திரம் நமது பிறப்புரிமை’ என்ற பாடலை. முகேஷூம், ‘வாங்க அம்மா வாங்க’ , பாடலை இயக்குனர் ம.க.செல்வமும் ‘ஓட்டுப் போட நீங்க வாங்க’ பாடலை யு.கே.முரளி மற்றும் வினோத்தும், ‘போடாதே கள்ள ஓட்டு’ பாடலை யு.கே.முரளியும் பாடியுள்ளனர்.
அனைத்துப் பாடல்களும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி மண்டலம் எண். 14, மண்டல அலுவலர் திரு.கா.லியாகத் அலி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. திரைப்பட இயக்குனர் திரு.நா.ஜிப்ஸி ராஜ்குமார் அவர்களால் நெறியாளுகை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் 2016 இசைப் பாடல்கள் வெளியீட்டுப் பணிகளை மக்கள் தொடர்பாளர் செல்வரகு திறம்பட செய்தார்.
Patrikai.com official YouTube Channel