வுகாத்தி

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்த மோடியின் அசாம் பயணத்தில் போராட்டக்காரர்கள் நிர்வாணமாக போராடி உள்ளனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இஸ்லாமியர் தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்யும் குடியுரிமை சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையில் இன்னும் ஒப்புதல் பெற வேண்டியது உள்ளது.

அதை ஒட்டி எல்லைப் புற மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அசாம் மாநில மக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளித்துள்ளனர். மிசோரம் மாநிலத்தில் பாஜகவினரே இந்த மசோதாவுகு எதிராக அறிக்கை விடுத்துள்ளனர். தற்போது அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது.

மோடி செல்லும் இடம் எல்லாம் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கருப்புக் கொடி காட்டி வருகின்றனர். அத்துடன் “மோடியே திரும்பிப் போ” எனவும் கோஷம் எழுப்பி வருகின்றனர். பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகன நடமாட்டமும் குறைந்து காணப்படுகிறது.

நேற்று மோடி கலந்துக் கொண்ட சட்டப்பேரவை நிகழ்வின் போது ஆறு பேர் கொண்ட எதிர்ப்பாளர்கள் குழு அசாம் மாநில தலைமை செயலகம் அருகே ஒரு காரில் வந்து இறங்கினார்கள். அவர்கள் திடீரென தங்கள் உடிகளை களைந்து மோடிக்கு எதிராக நிர்வாணமாக நின்றபடி கோஷமிட்டுள்ளனர். இது அசாம் மாநிலத்தில் கடும் பரபரப்பை உண்டாக்கி உல்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளிலும் மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. அத்துடன் கருப்புக் கொடிகளும் கருப்பு பலூன்களும் அவர் செல்லும் இடம் எல்லாம் பறக்க விடப்படுகிறது.

இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து அசாம் மாணவர்களில் ஒருவர், “மூன்று வருடம் முன்பு பாஜக காங்கிரசிடம் இருந்து மாநில ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியது ஒரு வரலாற்று சிறப்பாகும்.. ஆனால் மூன்று வருடத்தில் மாநிலத்தில் செல்வாக்கை இழந்துள்ளதும் வரலாற்று சிறப்பாகும்” என குறிப்பிட்டுள்ளார்.