ரசிங்கப்பூர்,

கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர ஒடிசாவில் ஒரு கோவிலில் மனிதனின் தலையைப் பூசாரி துண்டித்துள்ளார்.

                                                               பூசாரி ஓஜா

கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதையும் ஆட்டி வைக்கிறது.  இதில் ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.   மொத்தம் சுமார் 1660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதனால் இங்குள்ள மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.  கொரோனா பரவுதலைத் தடுக்க மாநில அரசு கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது

இம்மாநிலத்தில் கட்டாக் பகுதியில் உள்ள நரசிங்கப்ப்பூர் என்னும் இடத்தில் பிராமணி அம்மன் கோவில் உள்ளது.  இங்கு அதே பகுதியைச் சேர்ந்த சரோஜ்குமார் பிரதான் என்னும் 55 வயது நபர் கோவிலுக்கு வந்து கடவுளை விழுந்து வணங்கி உள்ளார்.  இந்தக் கோவிலின் பூசாரியான 70 வயதாகும் சன்சாரி ஓஜா என்பவர் இவர் பின்னால் நின்று அரிவாளால் ஓங்கி வெட்டி தலையைத் துண்டித்துள்ளார்.

அதன்பிறகு காவல்நிலையத்தில் சரண் அடைந்த பூசாரி தாம் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வர அம்பாள் தன்னிடம் இவ்வாறு செய்யச் சொன்னதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.  பிரதானின் தலையைத் துண்டித்த அரிவாள் தற்போது காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலை குறித்து பூசாரியிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.   அதே வேளையில் பிரதான மற்றும் ஓஜா ஆகிய இருவருக்கும் இடையே அந்த கிராமத்தின் எல்லை பகுதியில் உள்ள மாந்தோப்பு தொடர்பாகப் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.  எனவே விசாரணை அந்த கோணத்திலும் நடைபெற்று வருகிறது.