கொழும்பு :

லங்கையில் உள்ள பிரதான தொழில்களில் மீன்பிடி தொழிலும் ஒன்று. கொரோனா வைரஸ் காரணமாக அந்த நாட்டில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

“மீன் சாப்பிட்டால் கொரோனா எளிதில் தொற்றிக்கொள்ளும்” என வதந்தி பரவியதால், பலரும் மீன் சாப்பிடுவது இல்லை.

கொழும்பு மீன் சந்தையில் டன் கணக்கில் மீன்கள் விற்பனை ஆகாமல் இருந்தததால் அங்குள்ள பிரதான மீன் சந்தை மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்த பின்னும் மக்கள் மீன் சாப்பிட விருப்பம் காட்டுவதில்லை.

மீன் சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் கொழும்பு நகரில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலீப் வெட்டராச்சி செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்கள் முன்னிலையில், பச்சையாக மீன் சாப்பிட்டு, அதிற வைத்தார்.

“மீன் உண்பதால் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை மக்களுக்கு புரிய வைக்கவே பச்சையாக மீனை சாப்பிட்டேன். மக்கள் மீன் சாப்பிடாததால் மீன்பிடி தொழில் நசிந்து விட்டது. இனியாவது மக்கள் பயமின்றி மீன் சாப்பிடுவார்கள் என்று நம்புகிறேன்” என மாஜி அமைச்சர் திலீப் தெரிவித்தார்.

– பா. பாரதி