கும்பகோணத்தை சுற்றியுள்ள நவகிரக கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வரும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது.

ரூ. 750 கட்டணத்தில் காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்து திங்களூர் தொடங்கி மாலை திருநாள்ளாறு தரிசனம் முடிந்து இரவு சுமார் 8 மணி அளவில் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுகிறது.
வரும் பிப்ரவரி 24ம் தேதி முதல் துவங்கவுள்ள இந்த புதிய திட்டம் வார இறுதி நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுத்தப்படும்.

இந்த பேருந்தில் பயணம் செய்ய www.tnstc.in இணையத்தளம் மூலமாகவும் tnstc மொபைல் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
[youtube-feed feed=1]