சேலம்: தமிழ்நாட்டில், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சுற்றுசூழலை மாசுபடுத்தாக இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்து வரு கின்றன. அதன்படி,  சேலம் மாவட்டத்தில், முதன்முறையாக சேலத்தில் இருந்து மதுரைக்கு முதல் சிஎன்ஜி பேருந்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், சேலத்தில் இருந்து  மதுரை இடையே இந்த பேருந்து  இயக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் பல ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் நவீன காலத்திற்கு  ஏற்றபடி, தனியார் பேருந்துகளுக்கு சவால் விடுக்கும் வகையில்,  சொகுசு பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள், படுக்கை வசதியுடனான பேருந்துகள் என பல புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக,  எலக்ட்ரிக் பேருந்துகள், இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக,  கடந்த மார்ச் ஆறாம் தேதி ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இணைந்து நடத்திய பெட்ரோல் மற்றும் டீசல் சிலரை விற்பனை நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்ததுடன், சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) மூலம் இயக்கப்படும் 6 பேருந்து சேவைகளையும் தொடங்கி வைத்தார்.

அதாவது, ஏற்கனவே உபயோகத்தில் இருந்த டீசல் பேருந்தை, சிஎன்ஜி பேருந்தாக தமிழ்நாடு அரசு மறு சீரமைம்து உள்ளது. இந்த  மறுசீரமைக்கப்பட்ட ஆறு பேருந்துகளை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.

அதன்படி,   தமிழகத்தில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது.  குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினத்திற்கு இயக்கப்படும் டவுன் பேருந்து மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து  உத்திரகோசமங்கை வழியாக சாயல்குடிக்கு இயக்கப்படும் ஒரு பேருந்திலும் முழுக்க முழுக்க சிஎன்ஜியில் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டுள்து.

இதன் தொடர்ச்சியாக, தற்போது சேலம் மாவட்டத்தில் முதல் சிஎன்ஜி பேருந்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில், சேலம் டூ மதுரைக்கு இந்த புதிய பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட   அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) வழித்தட 553W (சைதாப்பேட்டை-ஸ்ரீபெரும்புதூர்) இரண்டு பேருந்துகளையும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) விழுப்புரம் காஞ்சிபுரம்-பூந்தமல்லி   வழித்தடத்தில் இரண்டு பேருந்துகளையும் இயக்கும்.

இது விரைவில் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும். மாநிலம் முழுவதும் உள்ள ஏழு போக்குவரத்துக் கழகங்களும் தலா இரண்டு எல்என்ஜி அல்லது சிஎன்ஜி பேருந்துகளை வைத்திருப்பதை உறுதி செய்வதே திட்டம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் ஒரு பேருந்துக்கான எரிபொருள் செலவை 7% முதல் 20% வரை குறைத்து, குறைந்த கார்பனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.