சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி ‘கிராண்ட் மாஸ்டர் ‘பட்டம் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் வீராங்கனை ஒருவர் முதன்முறையாக கிராண்ட் மாஸ்டர் பெற்றதுதான் இதுதான் முதன்முறை. இவர் பிரபல கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தது.
தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ள வைஷாலி, இந்தியளவில் 3வது வீராங்கனை என்ற பெருமையையும், இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் வைஷாலி.
வைஷாலி மற்றும் அவரது இளைய சகோதரர், சதுரங்க வீராங்கனை ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, வரலாற்றில் முதல் கிராண்ட்மாஸ்டர் உடன்பிறந்த ஜோடியாக மாறியுள்ளனர்.