சென்னை:
டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் மாற்றப்பட்டு நிதித் துறைகூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலர் கே.நந்தகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு, நிதித் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் (டிக்) முன்னாள் நிர்வாக இயக்குநர் எம்.ஆர்த்திமாற்றப்பட்டு, தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் (டான்செம்) நிர்வாக இயக்குநராக பணியமர்த்தப்பட் டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நிதித் துறை கூடுதல் செயலராகநியமிக்கப்பட்டுள்ள நந்தகுமார், கடந்த 2018 ஏப்ரலில் டிஎன்பிஎஸ்சி செயலராக நியமிக்கப்பட்டு 3ஆண்டுகள் அப்பதவியில் இருந்துள்ளார்.

குருப் 2, குருப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம், தேர்வுமுறையில் மாற்றம், விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை என பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். தேர்வு முடிவுகளை குறிப்பாக குரூப் 1 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட பெருமுயற்சி மேற்கொண்டார்.

உத்தேச விடைகளுக்கு (கீ ஆன்சர்) மறுப்பு தெரிவித்து தேர்வாணையத்திடம் தேர்வர்கள் முறையிடுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.