சென்னை: வரும் 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள பல்வேறான போட்டித் தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி.

பல்வேறு அரசுத் துறைகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான பாட்டித் தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டிற்கும், அந்த ஆண்டு நடைபெறவுள்ள துறைசார்ந்த தேர்வுகளுக்கான விளக்க அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிடுவது வழக்கம். அதைப்போலவே 2020ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த அட்டவணையின்படி, ஜனவரி முதல் அக்டோபர் வரை பல்வேறான தேர்வுகள் நடைபெறவுள்ளன. குரூப் 1 முதல் குரூப் 4 வரை பல்வேறு நிலைகளிலான தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதாவது, மொத்தம் 23 தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வுகள் விபர அட்டவணையை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் சென்று பார்க்கலாம்.