சென்னை: தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள 1083 பணியிடங்களுக்கான புதிய அறிபிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பிபவர்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர், உள்ளிட்ட 1083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு இன்று முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், 04.03.2023 தேதி இந்த தேர்வுகளுக்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், இனிய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வ தற்கான அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவை காலை மதியம் விதம் 27.05.2023ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.