சென்னை:
2022 பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2022 ம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் எனவும், தேர்வு அட்டவணை வெளியான 75 நாட்களுக்குப் பிறகு தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான அறிவிப்பிற்கு முன், மாடல் வினாத்தாள் வெளியிடப்படும் எனவும், பாடத்திட்ட அமைப்பு குறித்துக் கடந்த 1ஆம் தேதி முதல் ஆலோசித்து ஆணையம் தயாரித்து வருகிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.