சென்னை: தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைபெற்று வருகிறது முதற்கட்டமாக 82 இடங்களில் இன்று காலை தொடங்கி தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 20 தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணிக்கான தேர்வினை வெளியிட்டது. அதன்படி இந்த குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் என 534 பணியிடங்கள் உள்பட அரசு பணிகளில் காலியாக 1 540 பணியிடங்களை நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் குரூப் 2ஏ பணியில் கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், 273 காவல் உதவியாளர், மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் உதவியாளர், போக்குவரத்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து உதவியாளர், தொழிலாளர் உதவியாளர் என 48 துறைகளில் 2006 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 3 லட்சத்து 81ஆயிரத்து 305 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் குரூப்-2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 21 ஆயிரத்து 563 பேர் தால் ஒன்று தமிழ் மொழி தகுதி தேர்வும், பொது அறிவு தேர்வும் எழுதுகின்றனர்.
மேலும் பொது தமிழ் தேர்வை 16ஆயிரத்து 457 பேரும், பொது ஆங்கில தேர்வை 5 ஆயிரத்து106 பேர் எழுதுகின்றனர்.
இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 82 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.