சென்னை: தமிழ்நாடு அரசு, 2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவித்து உள்ளது. அதன்படி, 2025ம் ஆண்டு  ஜூலை 13ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. மேலும் 2025ம் ஆண்டு நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான உத்தேச அட்டவனையும் வெளியிடப்பட்டுஉள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1, 2, 4 தேர்வுகள் எப்போது என்பதற்கான உத்தேச ஆண்டு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2 தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு tnpsc.gov.in என்ற இணையத்தில் ஆண்டுத் திட்டத்தை அறிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டிற்கும் முன்பும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த தேர்வு கால அட்டவணை முன்பே வெளியிடப்படும். தேர்வு அட்டவணையை கொண்டு இந்தாண்டுக்கான தேர்வுகளை முன்பே அறிந்துகொண்டு, தேர்வர்கள் அதற்கான தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும். மேலும், தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி மற்றும் தேர்வு நடைப்படவுள்ள தேதி ஆகிய விவரங்களை தேர்வு கால அட்டவணையில் தெரிந்துகொள்ள முடியும்.

தற்போது,  2025-ம் ஆண்டிற்கு தற்போது வெளியாகியுள்ள அட்டவணை படி, 7 தேர்வுகள் நடைபெறவுள்ளது. குறிப்பாக அதிக பேர் எதிர்பார்க்கும் குரூப் 4 மற்றும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு 2025 :
2025-ம் ஆண்டு முதல் தேர்வில் அறிவிப்பு குரூப் 1 ஆக உள்ளது. 01.04.2025 தேதி குரூப் 1 அறிவிப்பு வெளியாகி தேர்வு 15.06.2025 அன்று நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2025 :
குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு 25.04.2025 வெளியாகி, இதற்கான தேர்வு 13.07.2025 அன்று நடைபெறவுள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு அடங்கிய பதவிகள்) 2025 :

டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு அடங்கிய பதவிகள் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்விற்கான அறிவிப்பு 07.05.2025 அன்று வெளியாகும். இதற்கான தேர்வு 21.07.2025 முதல் தொடங்கி 4 நாட்கள் நடைபெறும்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) 2025 :
டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு அல்லாத பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்விற்கான அறிவிப்பு 21.05.2025 அன்று வெளியாகி, 04.08.2025 அன்று முதல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும்.

டிப்ளமோ/ ஐடிஐ தகுதி தேர்வு 2025 :
டிப்ளமோ/ ஐடிஐ கல்வித்தகுதிக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்விற்கான அறிவிப்பு 13.06.2025 அன்று வெளியாகி, 27.08.2025 அன்று தொடங்கி 5 நாட்கள் தேர்வு நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கான அறிவிப்பு 15.07.2025 அன்று வெளியாகி, 28.09.2025 அன்று தேர்வு நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்விற்கான அறிவிப்பு 07.10.2025 அன்று வெளியாகி, 21.12.2025அன்று தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.