ரஜினிகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு!

சென்னை,

டிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீப காலமாக ரஜினி அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும்  காந்திய மக்கள் கட்சி தலைவரான தமிழருவி மணியனும், மதுரையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டு அரசியல் குறித்து தனது அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை திடீரென ரஜினியின் போயஸ் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார்.

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், திருநாவுக்கரசர் ரஜினியை சந்தித்து பரபரப்பாக கூறப்பட்டது.

ஆனால்,  திருநாவுக்கரசர் தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்கவே ரஜினி வீட்டுக்கு சென்றதாக  கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க வேண்டும் என கேட்க வேண்டியதில்லை. உட்கட்சி குழப்பத்தினாலேயே கலைய வாய்ப்புள்ளது என்று கூறினார்.
English Summary
TNCC Leader Thirunavukarasar sudden meet with Rajnikanth