சென்னை:
தமிழகத்தில் எம்.இ., எம்.டெக். உள்பட பொறியியல் கல்வியின் முதுநிலை படிப்புகளில் சேர 24–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
2019–2020ம் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் இடங்கள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு ஜூலை 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி
கூடுதல் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், 044–22359908, 22358314 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் விவரங்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.