சென்னை
சென்னை திநகரில் அமைந்துள்ள பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடை ஏலம் விடப்பட உள்ளது.
சென்னை நகர வாசிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒரு கடை திநகர் சரவணா ஸ்டோர்ஸ் ஆகும். முதலில் இந்த கடை 1970 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி பாத்திரக்கடையாக தொடங்கப்பட்டது. அதன் பிறகு சிறிது சிறிதாக விரிவடைந்து தற்போது பல கடைகளாகப் பரவி உள்ளது.
தற்போது வீட்டுப் பொருட்கள், ஜவுளிகள், எலக்ட்ரானிக்ஸ், ஃபர்னிச்சர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இங்கு விற்பனை ஆகின்றது. ஏற்கனவே இந்தக் கடைகளில் பல தொழிலாளர்கள் அத்துமீறல் நடந்ததாகத் தகவல்கள் வெளியான போதிலும் அனைத்தும் அடங்கி விட்டன. இதையொட்டி ஒரு தமிழ் திரைப்படமும் வெளியானது.
தி நகரில் உள்ள இந்திய வங்கி கிளை நேற்று ஒரு நோட்டிஸ் வெளியிட்டுள்ளது. அந்த நோட்டிசில் உஸ்மான் சாலையில் உள்ள 4800 சதுர அடியில் அமைந்துள்ள ரூ.124 கோடி ரூபாய் மதிப்புள்ள கடையும் திநகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்) கடையும் ரூ.288,08,67,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான ஏலம் வரும் 17 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாகவும் அந்த நோட்டீசில் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.