சென்னை
நாளை முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச்சுமை குறைப்பு போன்ற கோரிக்கைகளை வெகுநாட்களாக நிர்வாகத்திடம் எழுப்பி வருகின்றனர். இது குறித்து நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இதையொட்டி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்க உள்ளனர். காலவரையற்ற இந்த வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தொ மு ச, ஏ ஐ டி யு சி, மற்றும் சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன.
Patrikai.com official YouTube Channel