சென்னை
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 812 ஓட்டுநர்கள் நடத்துநர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .
நகரமயமாக்கலின் வேகம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆட்கள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. எனவே அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 812 பேரை நியமனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இவர்களைத் தேர்வு மூலமாகப் பணி நியமனம் செய்ய போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. தேர்வானவர்களைக் கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை போக்குவரத்துக் கழகங்களில் பணியமர்த்த போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
அதாவது கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.