மதுரை
தமிழக பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி பணி நீக்கம் செய்யப்ப்பட்டுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கக் கூடிய பாடநூல் கழகம், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அச்சடித்து வழங்கி வருகிறது. தமிழக்ம முழுவதும் இந்த பாடநூல் கழகத்திற்கு 22 இடங்களில் பாட புத்தக கிடங்குகளும் ஒவ்வொரு கிடங்கிலும் மண்டல அலுவலர் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்களை தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்து பல்வேறு மாவட்டங்களில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை மண்டலத்தில் பணிபுரியும் பெண் அலுவலர், 75 லட்சம் ரூபாய்க்கு ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் முறைகேடு செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தரமணியில் பாடநூல் கழகத்திற்கு ஒரு கிடங்கு இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் மண்டல அலுவலர், அதே போல் திருவள்ளூர் மற்றும் திண்டுக்கல் மண்டல அலுவலர்கள் ஆகியோரும் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட 3 மண்டல அலுவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.