
அஹமதாபாத் :
குஜராத் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்து, சாதிப் பாகுபாடு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட தமிழக மாணவர் மாரிராஜ் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத்தின் பிஜே மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த மாரிராஜ். இவர், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்.
தற்போது மூன்றாம் ஆண்டு மருத்துவ உயர் படிப்பு படித்து வரும் மாரிராஜ், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாரிராஜ் கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலில் இருந்ததாகவும், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கிய நிலையில் விடுதி அறையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சேர்க்கப்ட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலியல் மாரிராஜ் ஆபத்தான கட்டத்தை தாண்டி வட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அக்கல்லூரியில் நிலவும் சாதிய பாகுபாடு தான், தங்கள் மகன் தற்கொலைக்கு முயல காரணம் என்று மாரிராஜ் பெற்றோர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]