சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணி நிலவரப்படி  63.73 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08  சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக தேர்தல்ஆணையம் தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 70.73 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது

இன்று மாலை 5 மணி நிலவரப்படி பாராளுமன்ற தொகுதிகளில்   63.73 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08  சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக தேர்தல்ஆணையம் தெரிவித்து உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மாலை 5 மணி நிலவரப்படி, மக்களவை தொகுதி 63.10%, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் 57.67% வாக்குகள் பதிவாகி உள்ளது.