சென்னை: தமிழகஅரசுக்கு எதிரான நேற்று போராட்டம் நடத்திய ஒப்பந்த ஊதிய 487 செவிலியர்கள் மீது இன்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 2015ம் ஆண்டுமுதல் பணியாற்றி வருவதாகவும், அmதனால், தங்களை தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நேற்று 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட காவல் துறையினர் செவிலியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது, இதையடுத்து, செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
அதன்படி செவிலியர்கள் சங்கத்தின் 8 பேர் கொண்ட குழுவினர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் இந்த நிதியாண்டில் முதல் கட்டமாக 5,000 பேரை பணி நிரந்தரம் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார் என சங்கத்தின் செயலாளர் அம்பேத்கர் கணபதி தெரிவித்தார். இதையடுத்து பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போராட்டம் நடத்திய 487 செவிலியர்கள் மீது தமிழக காவல்துறை 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. செவிலியர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மிரட்டும் செயல் கண்டனத்துக்குரியது என செவிலியர்கள் தெரிவித்து உள்ளனர்.