விழுப்புரம்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறை தண்டனை அளிக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறி உள்ளார்.

தமிழக அரசு விவசாயிகளுக்குக் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்கி வருகிறது.  இந்த கடனை வழங்க பல கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது.   இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் ஒரு அரசியல் நிகழ்வில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக் கொண்டுள்ளார்.

திமுக அல்லாஅத மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடந்துள்ளது.,  இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மீரான் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் அவர், “திமுக ஆட்சி முழுக்க வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது.   கூட்டுறவு வங்கிகளில்   விவசாயிகளுக்குக் கடன் வழங்க லஞ்சம் கேட்டால் அவ்வாறு கேட்பவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.