சென்னை

பி ஈ சேர்க்கைக்கான விவரங்கள் குறித்து தமிழக உயர் கல்வித்துறை கே பி அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு பொறியியல் பட்டப் படிப்புக்கான சேர்க்கை குறித்து  செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியது.   இந்த சந்திப்பில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி.  அன்பழகன் கலந்துக் கொண்டார்.   அவர் இது குறித்த கையேடு ஒன்றை அப்போது வெளியிட்டார்.    மேலும் பொறியியல் பட்டப்படிப்பு சேர்க்கை குறித்த விவரங்களையும் அறிவித்துள்ளார்.

அமைச்சர், “இதுவரை பொறியியல் கல்லூரிகள் சேர்க்கை கலந்தாய்வுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் சென்னைக்கு வர வேண்டியிருந்தது.   இதனால் பலர் சிரமத்துக்குள்ளாவதாக செய்திகள் வந்ததால் ஆன்லைன் மூலமான கலந்தாய்வு முறையை 2018-19 முதல் தமிழக அரசு அமுல்படுத்தி உள்ளது.   இதனால் இணையம் மூலம் தேவையான கல்லூரியை தேர்ந்தெடுக்க முடியும். மேலும் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரும் 29ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்ப பதிவு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.   மே 3 முதல் ஆன்லைன் பதிவு தொடங்கப்படும்.  விண்ணப்பத்தை பதிவு செய்ய மே 30ஆம் தேதி கடைசி தினம் ஆகும்.    அதன் பிறகு ஜுன் மாதம் முதல் வாரத்தில் உதவி மையங்களில் 6 தினங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.    அதை தவற விட்டோர் 7 ஆம் நாள் அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பை முடித்துக் க்ள்ளலம்

அதைத் தொடர்ந்து ஜூலை முதல் வாரம் முதல் கலந்தாய்வு தொடங்கும்.    பின்னர் அறிவிக்கப்பட உள்ள இந்த கலந்தாய்வு கால அட்டவணைப்படி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்த படியே தேர்வு செய்துக் கொள்ளலாம்.    விண்ணப்ப படிவத்துடன் வழிகாட்டி கையேடு ஒன்று வழங்கப்படும்.   அதைக் கொண்டு கிராமப்புற மாணவர்களும் எளிதாக ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள முடியும்.

தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்ய வாய்புக்கள் அளிக்கப்பட்டுள்ளது.   இதனால் மாணவர்கள் பல கல்லூரிகளை எந்த உச்சவரம்பும் இன்றி தேர்வு செய்யலாம்.   கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.  சென்ற வருடம் 586 பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்தது.   தற்போது 19 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தி விட்டபடியால் 567 கல்லூரிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது”   எனத் தெரிவித்துள்ளார்.