
சென்னை:
தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும் அவர், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பானை வெளியிட வேண்டும் என்றும், குற்றப் பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
தேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel