சென்னை

கொரோனா பாதிப்பற்ற 27 மாவட்டங்களில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புக்களுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-21 ஆம் ஆண்டு தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் முழு ஆண்டு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  மேலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கபட்டது.

அத்துடன் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வாயிலாக அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  அத்துடன் இந்த பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் தங்கள் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அரசு தெரிவித்துள்ளது.

உயர்கல்வி பயில்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளுக்காகவும் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கவும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை சுத்தம் செய்வது மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி குறித்த நிகழ்வுகள் குறித்துப் பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளுக்காகத் தலைமை ஆசீர்யர்கள் அனைவரும் அரசின் வழி காட்டு நெறிமுறைகளைப்  பின்பற்றி 14/06/2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மற்ற ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர உத்தரவு இடப்பட்டுல்ளது.

ஏற்கனவே 2021-22 ஆம் ஆண்டுக்கான 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.  அதே வழிமுறையை பின்பற்றி 1 முதல் 125 வரை அனைத்து வகுப்புக்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இந்த வகுப்புக்களில் சென்ற ஆண்டு பயின்ற மாணவரக்லின் தேர்ச்சி விவரங்களை இணையம் மூலம் வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.