சென்னை
தமிழக அரசு வரும் 14 ஆம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது.
.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்றுப் பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று அண்ணா பிறந்த நாளில் இவர்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்., விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு வராத குடும்பத் தலைவிகள், இ-சேவை மையங்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வரும் 14ம் தேதியே அவர்களுடைய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதாவது 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒருநாள் முன்கூட்டியே பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.