சென்னை
தமிழக அரசு 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது.
இன்று தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்,
”*நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம்; புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம்
*தருமபுரி மாவட்ட கலெக்டராக ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் நியமனம்
* திண்டுக்கல் கலெக்டராக சரவணன் நியமனம்.
*கிருஷ்ணகிரி கலெக்டராக தினேஷ்குமார் நியமனம்
* விழுப்புரம் மாவட்ட கலெக்டராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்
* திருவண்ணாமலை கலெக்டராக தர்ப்பகராஜ் நியமனம்
* திருப்பத்தூர் கலெக்டராக மோகனசந்திரன் நியமனம்
*திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி வணிகவரித்துறையின் இணை ஆணையராக நியமனம்
* தருமபுரி கலெக்டர் சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குநராக மாற்றம்
* தொழில் நுட்ப கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம்
*கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம்
*நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி லலித் ஆதித்ய நீலம் நியமனம்”
என அறிவிக்கப்பட்டுள்ளது.