சென்னை

ரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 12 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றான்.   அதே வேளையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கவில்லை.   மாணவர்களின் மனநிலை, பெற்றோர்களின் கருத்தையொட்டி தமிழக அரசு நவம்பர் 1 முதல் கொரோனா வழிகாட்டு முறைகளைப் பின்பற்றித் திறக்கப்படும் என அறிவித்தது.

ஆயினும் இப்போது பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   அவ்வகையில் பள்ளிகள் நவம்பர் 1 ஆம் தேதி அன்று நிச்சயம் திறக்கப்படுமா என்னும் கேள்வி பலர் மனதில் உள்ளது.   இதையொட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரும் 12 ஆம் தேதி அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அரசின் தேர்வுகள் துறை, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிடோர் கலந்து கொள்கின்றனர்.   அப்போது பள்ளிகள் நவம்பர் 1ல் திறக்கப்படுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.  கூட்டத்தில் வரும் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.