சென்னை
தமிழக அரசு 13 ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.
இன்று தமிழக அரசு 13 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அந்த விவரங்கள் பின் வருமாறு:
*சி.பி.சி.ஐ.டி. ஐஜியாக இருந்த தேன்மொழி தமிழ்நாடு காவல்துறை அகாடமி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
*ராணிப்பேட்டை ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
*கோயம்புத்தூர் மாவட்ட வடக்கு துணை ஆணையராக இருந்த ரோஹன் நாதன், கோவை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
*அரக்கோணம் ஏ.எஸ்.பி. யாதவ் கிரிஷ்க்கு திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
*ஆனந்த் குமார் ஐ.ஏ.எஸ்., அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரிக்கு, மதுரை நகரச் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
*காரைக்குடி எஸ்.பி. ஸ்டாலினுக்கு கோவை நகர வடக்கு பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
*சென்னையில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக டி. ரமேஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
*சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக கே. ஆதிவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
*சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராக எஸ்.எஸ். மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.