சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா ஈக்வடாரில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமைறைவாக உள்ளார். ஆயினும் அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் தோன்றி உரையாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாசா எனும் தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக பேசி வருகிறார்.

ஆனால் , கைலாசா நாடு எங்கு இருக்கிறது; நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது. தமிழக அரசு மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்துக் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையின் போது’நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை எனவும் தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார், என்றும் அ மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் உயர்நீதிமன்றம், இந்தியாவிலேயே இல்லாத நித்யானந்தாவின் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.