நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் பகுதியில், கடல்நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க தூண்டில் வளைவு அமைத்திட தமிழக ரூ.9 1/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட அழிக்கால் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.9 1/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட, அழிக்கால் பகுதியில், கடந்த சில தினங்களாக கடல் சீற்றம் ஏற்பட்டு, மணல் அரிப்பினால், ஊருக்குள் கடல்நீர் புகுந்துள்ளது. அதனை தொடர்ந்து, அப்பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், அஸ்விந்த் (வயது 26) என்பவர் மரணமடைந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அந்தப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதுகுறித்து,தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரத்தை தோவாளை அரசினர் விருந்தினர் இல்லத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த பங்குதந்தை உள்பட ஊர்மக்கள் நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்தொடர்ந்து, அங்கு ஊருக்குள் தண்ணீர் புகாதவாறு தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதா கூறப்பட்டது.
ஏற்கனவே 22.9.2018 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின்போது, அழிக்கால், கோவளம், பெரியநாயகி தெரு, மேல்மிடாலம், இணையம் ஆகிய பகுதிகளில், அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் கோரிக்கையினை ஏற்று மீனவ மக்களின் நலன் கருதி தூண்டில் வளைவு அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, நாகர்கோவிலில் அறிவித்தார்.
அதன்படி, அழிக்கால் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.9 1/2 கோடியும் கோவளம் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.11 கோடியும் மேல்மிடாலம் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.91/2 கோடியும் பொியநாயகி தெரு பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.7 கோடியும் இனயம் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட ரூ.8 கோடியும் ஆக மொத்தம் ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 7.4.2020 அன்று அதற்கான அரசாணை வௌியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.