சென்னை

மிழக அரசு வெளிமாநிலபதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளது

தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும்,  போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கு பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டிருந்தது.

அந்த விதிகள் முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது என கடந்த 12-ம் தேதி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையாலும்,  முன்பதிவு செய்திருந்த பயணிகளாலும் இன்று காலை வரை ஆம்னி பேருந்துகள் இயங்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழக அரசு,

”இன்று காலையுடன் தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயங்க அவகாசம் முடிந்ததால்  அவற்றில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அதனை ரத்துசெய்ய வேண்டும்,

விதிகளை மீறி இயக்கப்படும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இனி முடக்கப்படும் என்பதால் அவற்றில் பயணிக்க வேண்டாம்

மேலும் விதிகளை மீறி மக்கள் பயணித்தால் ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது”

என்ரு பொதுமக்களுக்குவேண்டுகோள் விடுத்துள்ளது.