சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் வiகயில்,  பொம்மை உற்பத்தி கொள்கை 2025யை வெளியிட்டுள்ளது.  அதன்படி, இந்தியாவுக்குள், பொம்மை உற்பத்தியாளர்கள் கட்டாயம் இந்திய தர நிர்ணய அமைப்பின் தர அடையாளத்தையும் சான்றிதழையும் பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

பொம்மைகள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தமிழ்நாட்டை ஒரு உலகளாவிய மையமாக நிலைநிறுத்தும் நோக்குடன், தமிழ்நாடு அரசு பொம்மை உற்பத்தி கொள்கை 2025 என்ற ஐந்து ஆண்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது.

இந்தக் கொள்கை பெருநிறுவன முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பாரம்பரிய பொம்மைத் தொகுதிகளை வலுப்படுத்துவதற்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நோக்கமாக கொண்டுவரப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் மூலம ரூ.50 கோடி மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்து, குறைந்தபட்சம் 50 வேலைகளை உருவாக்கும் பொம்மை உற்பத்தி அலகுகளுக்கு அரசு சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இக்கொள்கையின் முக்கிய கவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தியின் மீது உள்ளது. உற்பத்தியாளர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதற்கும், கழிவுகளைக் குறைக்கும் நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு மற்றும் பொம்மை தரங்களுக்குக் கண்டிப்பான இணக்கத்தை வலியுறுத்துகிறது. இந்தியாவுக்குள், பொம்மை உற்பத்தியாளர்கள் கட்டாயம் இந்திய தர நிர்ணய அமைப்பின் தர அடையாளத்தையும் சான்றிதழையும் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மாதத்திற்கு ரூ. 4,000 மானியமும், பெண்கள், திருநங்கைகள், நிர்ணயப்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாதத்திற்கு ரூ. 6,000 மானியமும் திறன் மேம்பாட்டு நிதியாக வழங்கப்படும். சிப்கார்ட்டில் பொம்மை உற்பத்தித் திட்டங்கள், தகுதியான நிலையான சொத்துக்களில் 20% வரை, ‘ஏ’ மற்றும் ‘பி’ மாவட்டங்களில் 10% சலுகை விலையிலும், ‘சி’ மாவட்டங்களில் 50% சலுகை விலையிலும் நிலம் பெற்றுக்கொள்ள வரையெறுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில் பொம்மைத் தொகுப்புகளை ஊக்குவிக்க, ‘சி’ மாவட்டங்களில் 50 ஏக்கர் வரை தனியார் நிலச் செலவில் 50% மானியம் (ரூ. 2 கோடி உச்சவரம்பு) வழங்கப்படும். சிப்காட் (SIPCOT) நிலத்தில் செயல்படும் அலகுகளுக்கு 100% முத்திரைக் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். தனியார் நிலம் வாங்கும் அலகுகளுக்கு 100% பின்தளச் செலவுத் திருப்பிச் செலுத்துதல் ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

டேன்ஜிட்கோ (TANGEDCO) விடம் இருந்து வாங்கப்படும் அல்லது சொந்தமாக உற்பத்தி செய்து பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு நீட்டிக்கப்படும். இக்கொள்கையின் முக்கிய உந்துதல்களில் ஒன்று விளாச்சேரி, தஞ்சாவூர் மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற பாரம்பரிய பொம்மை தயாரிப்புத் தொகுதிகளை மீட்டெடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களில் பொது வசதி மையங்கள், புவியியல் குறியீடு (GI) பதிவுக்கான ஆதரவு, வடிவமைப்பு மற்றும் முன்மாதிரி உள்கட்டமைப்பு, இ-காமர்ஸ் ஒருங்கிணைப்பு மற்றும் பொம்மை சுற்றுலாப் ஊக்குவிப்பு ஆகியவை அடங்கும்.

தொழில்துறை துறை இக்கொள்கையைச் செயல்படுத்தும். வழிகாட்டி தமிழ்நாடு நோடல் ஏஜென்சியாகச் செயல்படும். சிப்காட் (SIPCOT)  நிதி வழங்குவதற்கான அதிகார அமைப்பாக இருக்கும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை கைவினைஞர்களுக்கான முயற்சிகளைக் கவனிக்கும்.

உற்பத்திக்கான 9 துணைப் பிரிவுகள்:

ஆக்சன் உருவங்கள், சேகரிப்புப் பொருட்கள், பொம்மைகள், பஞ்சுப் பொம்மைகள், கட்டுமானத் தொகுப்புகள், கட்டுமான பொம்மைகள், கல்வி, மாண்டிசோரி பொம்மைகள், ஸ்டீம் (STEM) பொம்மைகள், மின்னணு, ஊடாடும் பொம்மைகள், பலப்பலகை விளையாட்டுகள், புதிர்கள், ரிமோட் கன்ட்ரோல் பொம்மைகள், குழந்தை, தவழும் குழந்தைப் பொம்மைகள், உடைகள், வேடப்பொருட்கள் உள்ளிட்ட பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கையின் கீழ், 50 கோடி ரூபாய் முதலீடு மற்றும் குறைந்தது, 50 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்படும்.

மூலதன மானியம் அதன்படி, 500 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு, 7 சதவீதமும், 300 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு, 10 சதவீதம் – 12 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும் என, பொம்மை தயாரிப்பு ஊக்குவிப்பு கொள்கையில் கூறப்பட்டுஉள்ளது.

மானியங்கள்

• திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு மாதம் 4,000 ரூபாய்

• பெண்கள், திருநங்கைகள், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு தலா 6,000 ரூபாய்

• வடிவமைப்பு பயிற்சிக்கு மாதம் 10,000 ரூபாய்

• சர்வதேச தரச்சான்று பெறும் செலவில் 50%

• காப்புரிமை பெறும் செலவில் 50%

பொம்மைகள், குழந்தைகள் விளையாட்டு பொருள் சந்தை, 2025ல் 15.50 லட்சம் கோடி ரூபாய் ; 2030ல், 23 லட்சம் கோடி ரூபாயாக உயரும் ‘சிப்காட்’ பூங்காவில், 10 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை சலுகை விலையில் மனைகள்; பதிவு கட்டணம் விலக்கு மின்சார வரி, 5 ஆண்டுகளுக்கு விலக்கு; எம்.எஸ்.எம்.இ.,களுக்கு தனியே மூலதன மானியம், ஊதிய மானியம் என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]