சென்னை:
மிழகத்தில் சென்னை மாநகரப் பகுதியை தவிர்த்து, நாளை முதல் மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள்  இயங்குவதற்கு தமிழகஅ அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து  அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சி, பேருராட்சி பகுதிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லை.
குளிர்சாதன வசதி இருப்பின் கடைகளில்  அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது .
சலூன்களில் வேலை செய்கிற பணியாளர்களுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு  காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சலூன்களில் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு  தமிழக அரசு அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]