எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் முதல்கட்டமாக திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) மூலம் இயங்கும் இரண்டு பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தொடங்க உள்ளது.

மாநில அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (டிஎன்எஸ்டிசி) விழுப்புரம் கோட்டம் புறநகர் வழித்தடத்தில் ஒரு பேருந்தையும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக (எம்டிசி) வழித்தடத்தில் மற்றொரு பேருந்தையும் அறிமுகப்படுத்துகிறது.

சோதனை வெற்றியடைந்தால், டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக திரவ இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் பேருந்து எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பேருந்துகளின் எரிபொருள் செலவு குறைவதுடன் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுவரும் நிதி பாற்றாக்குறை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.