சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 % போனஸ் அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அரசின் சி, டி உழியர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும்.

தீபாவளியையொட்டி தமிழகஅரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கும் அதுபோல நடப்பாண்டு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67 % கருணைதொகை என மொத்தம் 10% போனஸ் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.