சென்னை: 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அந்த நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு லைசென்சை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைடுத்து இநத் மருந்துக்குநாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் கோல்ட்ரிப் ஆலை நிரந்தரமாக மூடப்படும். கோல்ட்ரிப் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத 2 தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
கோல்ட்ரிப் இருமல் மருந்தில் நச்சுத்தன்மை அதிக அளவில் இருப்பதை தமிழ்நாடும் கண்டுபிடித்தது, ஆனால், மத்திய பிரதேசமும் மத்திய அரசும் நச்சுத்தன்மை இல்லை என்று விட்டு விட்டார்கள். அதனால், இந்த விவகாரத்தில் சரியாக ஆய்வு செய்யாத மூத்த மருந்து ஆய்வாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பின் நிரந்தரமாக மூட முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ‘ஸ்ரீசென் பார்மா’ நிறுவன உரிமையாளர் வரதராஜன் மத்திய பிரதேச போலீசாரால் இன்று காலை கைது செயியப்பட்டார். இவரது நிறுவனத்தில், தயாரிக்கப்பட்ட, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து உட்கொண்டு, மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தைகளின் சிறுநீரக செயழலிப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தில், பெயின்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் ‘டை எத்திலீன் கிளைசால்’ என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://patrikai.com/kanchipuram-pharmaceutical-factory-owner-arrested-in-coldrif-cough-syrup-related-deaths-of-children/