சென்னை: இந்த 2020ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதுகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

ரூ.1 லட்சத்திற்கான காசோலை, 1 சவரன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை இந்த விருதுகளில் அடக்கம்.

திருவள்ளுவர் விருது, தந்தைப் பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது, தமிழ்த்தாய் விருது, கம்பர் விருது மற்றும் சொல்லின் செல்வர் விருது போன்றவை அவற்றுள் அடக்கம்.

திருவள்ளுவர் விருது நித்யானந்த பாரதிக்கும், தந்தைப் பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கும், பேரறிஞர் அண்ணா விருது கோ.சமரசத்திற்கும் வழங்கப்பட்டது.

மேலும், இளங்கோவடிகள் விருது, ஜி.யு.போப் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, உமறுப்புலவர் விருது, மறைமலை அடிகளார் விருது மற்றும் மகாகவி பாரதியார் விருது போன்றவையும் வழங்கப்பட்டன.

[youtube-feed feed=1]