சென்னை
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்த நாளில் இனிப்பு பொங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்க் இலவசமாக காலை மற்றும் மதிய உணவை சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.
”சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும். இதற்காக ரூ.4.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களிலும் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.