சென்னை

மிழக அரசு பொங்கல் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்துக்குரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

வருடம் தோறும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு இலவச வேட்டி சேலை வழங்குவது வழக்கமாகும்  இந்த வேட்டி சேலைகள் தமிழக மக்களுக்கு அவரவர் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.

இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  அதன்படி மொத்தம் 1.77 கோடி சேலை, 1.77 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கால கெடுவிற்குள் இந்த வேட்டி சேலைகளை உற்பத்தி செய்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது., ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு விரல் ரேகை பதிவு மூலமாக வேட்டி, சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய் துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.