சென்னை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜினாமாவைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.  அதில் திமுக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.   ஆளும் அதிமுக பல இடங்களில் தோல்வி அடைந்ததால் ஆட்சியை இழந்தது.

இதையொட்டி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது மற்றும் தமது அமைச்சரவை சகாக்களில் ராஜினாமாவை ஆளுநரிடம் அளித்தர்.  அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக கொண்டு 15 ஆம் தமிழக சட்டப்பேரவையைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அடுத்த அமைச்சரவை பொறுப்பேற்கும் வரை  முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியில் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

[youtube-feed feed=1]