சென்னை:
மிழக கவர்னராக கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தியை நியமிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சங்கரமூர்த்தி
சங்கரமூர்த்தி

தமிழக தற்போதைய கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இந்த மாதம் 31ந்தேதியோடு முடிவடைகிறது. அதன் காரணமாக தமிழகத்திற்கு புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜ.கவின் மூத்த தலைவர் சங்கரமூர்த்தியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஆனந்திபென்
ஆனந்திபென்

கடிதத்தில், தமிழகம் – கர்நாடகா இடையேயுள்ள காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினைகளை  சுட்டிக்காட்டி, இதனால் மேலும் பிரச்சினைகள் எழக்கூடும் எனவும், ஆகவே  கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தியை தமிழக கவர்னராக நியமிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் , அதே நேரத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென்-ஐ  நியமிக்க ஆட்சேபனை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வரின் எதிர்ப்பால் கர்நாடக சங்கரமூர்த்தி தமிழக ஆளுநராக நியமிக்க வாய்ப்பில்லை  என நம்பப்படுகிறது.
.