சென்னை:
மிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என நாளை தலைமைச்செயலர் ஆலோசனை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் தொடரும் எனத் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைத் தவிரப் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கின. மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை தொடரும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என நாளை தலைமைச்செயலர் ஆலோசனை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத்தலங்களைத் திறக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சமயத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.