சென்னை
தமிழக அரசு ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்துக்கான துவரம்பருப்பு மற்றும் எண்ணெய்யை ஆகஸ்ட் மாதம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
மாதந்தோறும் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் பருப்பு, எண்ணெய், அரிசி, சர்க்கரை போன்றவை குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அரசு இந்த பொருட்களை மொத்தமாக டெண்டர் மூலம் கொள்முதல் செய்து அரசு வழங்கி வருகிறது.
ஆனால் ஒரு சில சமயங்களில் டெண்டர் மற்றும் கொள்முதலுக்கு தாமதமாகும் போது, அம்மாதம் மக்களுக்கும் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் அவற்றை அடுத்த மாதத்தில் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த தட்டுப்பாடு கடந்த மூன்று மாதங்களாக இருந்து வருவதால் இவை அடுத்தடுத்த மாதங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஜூலை மாதத்திற்கான பருப்பு, பாமாயில் பெறாதவர்களுக்கு அதனை ஆகஸ்ட் மாதத்தில் வழங்கலாம் என ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.