சென்னை
தமிழக்த்தில் ஒரே நாளில் 5,979 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் மரபுசார மின்சக்தி உற்பத்தி வெகுவாக பரவி வருகிறது. அவ்வகையில் காற்றாலை, மற்றும் சூரிய ஒள யின் மூலம் மின்சார உற்பத்தி செய்வதில் தமிழகம் முன்னேறி வருகிறது. அவ்வகையில் நேற்று முன்தினம் தமிழகம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
தமிழக மின்சார வாரியம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தமிழகத்தில் 09.08.2024 அன்று ஒரே நாளில் 5,979 மெகாவாட்(MW) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய சாதனையான 5,704 மெகாவாட்டை (02.08.2024) இது விஞ்சியுள்ளது.
தவிர41.40 மில்லியன் யூனிட்(MU) மின்சாரம் அதிகபட்சமாக மின் கட்டமைப்பில் உட்கொள்ளப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகத்தின் முதன்மையை இது உறுதிப்படுத்துகிறது ”
எனத் தெரிவித்துள்ளது.