ராமேஸ்வரம்
கச்சத்தீவில் நடைபெற உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்கள் ராமேஷ்வரத்தில் இருந்து புறப்பட்டனர்.
கச்சத்தீவில் வருடா வருடம் இருநாள் நடைபெறும் அந்தோணியார் திருவிழா இன்று தொடங்குகிறது இன்று கொடியேறத்துடன் தொடங்கும் இந்த திருவிழாவில் இன்றைய இரவு சிலுவைப் பாடு நிகழ்ச்சியும் திருப்பலியும் நடைபெறும். நாளை காலை சிறப்புத் திருப்பலி நடைபெற உள்ளது. இது வரை தமிழ் மொழியில் மட்டும் நடைபெற்ற இந்த நிகழ்வு நாளை முதல் முறையாக சிங்கள் மொழியிலும் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்துக் கொள்ள தமிழகத்தை சேர்ந்த 2095 மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டனர். இவர்கள் 62 விசைப்படகுகள் மூலம் கச்சத்திவுக்கு செல்கின்றனர். இதற்கு அரசு சார்பில் பல்வேறு சோதனைகள் நடத்தி அதற்குப் பின் அந்தப் படகுகளும் மீனவர்களும் பயணம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.