சென்னை: தமிழ்நாட்டில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டிசம்பம் 2வது வாரத்தில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டு, 4வது வாரம் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படும். இந்த நிலையில், நடப்பாண்டு,  11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில்  2023 – 24ம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் நடந்து முடிந்தது. அதில், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.   இதைத்தொடர்ந்து, 6 முதல் எஸ்எஸ்எல்சி மாணவ – மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அடுத்த மாதம்   (டிசம்பர்) 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் நடைபெற  உள்ளது. 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.

இந்த நிலையில்,  தற்போது 11ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.  அதன்படி, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் நடைபெற போகிறது.  11-ம் வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், 12-ம் வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும் என்றும்,

டிசம்பர் 11ந்தேதி தமிழ், 12-ல் விருப்ப மொழி, டிசம்பர் 13ந்தேதி  ஆங்கிலம்,  டிசம்பர் 15ந்தேதி    அறிவியல், டிசம்பர் 18ந்தேதி   கணிதம், டிசம்பர் 20ந்தேதி   சமூக அறிவியல் மற்றும் டிசம்பர் 21ந்தேதி  உடற்கல்வி தேர்வுகள் நடைபெற உள்ளன.

தேர்வுக்கு முந்தைய நாளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதுபற்றி பதிவு செய்யவேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் வரும் 2024 ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.