சென்னை

மிழக தேர்தல் ஆணையம் 569 வேட்பு மனுக்களை நிராகரித்துள்ளது.

வரும் ஏப்ரல் 19 அன்று தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆன்தேதி வரை நடைபெற்றது. நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது.

தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,741 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 933 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 569 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

ஒரு சில இடங்களில் பிரபலமான வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருந்ததாக சுட்டிக் காட்டப்பட்டு, அந்த தவறுகள் திருத்தப்பட்ட பின்னர் மனுக்கள் ஏற்கப்பட்டன. பாஜக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிட்ம் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 22 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து அதில் 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

நாளை வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற அவகாசம் உள்ளதால், நாளை மாலைக்குள் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.